இன்று இரவு டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் நாளுக்கு நாள் மோதல் முற்றி வரும் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார்...
x

இன்று இரவு டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் நாளுக்கு நாள் மோதல் முற்றி வரும் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார்.

இன்று இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் முலம் டெல்லிக்கு 3 நாள் பயணமாக அவர் செல்ல உள்ளார். தொடர்ந்து பீகாரில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ளும் அவர், பின்னர் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுநர் டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தல் முடியும் வரை மாநில திமுக அரசுக்கு எதிராக கடுமை காட்ட வேண்டாம் என்று ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுறுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி பயணத்தை முடித்து விட்டு வரும்15ந் தேதி மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்