"அரசின் திட்டங்கள் தொலைதூர பகுதிக்கும் செல்கின்றன" பிரதமர் மோடி பேச்சு

மத்திய அரசின் திட்டங்கள் மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமின்றி, தொலைதூர பகுதிகளுக்கும் சென்றடைவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்...
x

"அரசின் திட்டங்கள் தொலைதூர பகுதிக்கும் செல்கின்றன" பிரதமர் மோடி பேச்சு

மத்திய அரசின் திட்டங்கள் மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமின்றி, தொலைதூர பகுதிகளுக்கும் சென்றடைவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.குஜராத் மாநிலம் நவ்சாரியில் நடைபெற்ற குஜராத் பெருமை இயக்க நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பழங்குடியின மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளின் கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகக் கூறினார். அனைவருக்குமான வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுவதாகக் கூறிய அவர், மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, அணுக முடியாத இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்வதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்