நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் தாயார் மறைவு.. உதயநிதி நேரில் அஞ்சலி | DMK
தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனின் தாயார் லீலாவதியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனின் தாயார் லீலாவதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக நாமக்கல் காவிரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாமக்கல்லுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன், மு.பெ.சாமிநாதன், மூர்த்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்
Next Story
