அதிமுக நிர்வாகி வீட்டில் கைப்பற்றிய வெடிகுண்டுகள் - பரபரப்பு சம்பவம்

திருச்சி அரியமங்கலத்தில், அதிமுக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
x

திருச்சி அரியமங்கலத்தில், அதிமுக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி

கேபிள் சேகர் என்பவரது மகன் முத்துக்குமார்,

வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து இவரது வீட்டையும் குமரன்தெருவில் உள்ள பண்ணை வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 3கிலோ எடை கொண்ட ஆணி மற்றும் பால்ஸ் உள்ள வெடிகுண்டுகளையும், அதனுடன் பட்டாசு வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்கு பின்னர் வெடிகுண்டுகள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, முத்துக்குமாரை கைது செய்த அரியமங்கலம் போலீசார், சரவணன், குட்ட பாலு, கணேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்