தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல் | Tamilnadu Government | EPS | ADMK
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனவே, பாதிக்கப்பட்ட மக்கள், பழைய கட்டுமானங்களை இடித்துவிட்டு, புதிய வீடுகள், கடைகளை கட்டுவதற்கு அனுமதியும், மின் இணைப்பும் வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி மக்களை பாதிக்கும் வகையில் உள்ள தொடர் கட்டடம் மற்றும் Planning Permission ஆகிய பிரச்சனைகளை சரிசெய்து, உடனடியாக கட்டட அனுமதி மற்றும் மின் இணைப்பு வழங்க, விரிவான அரசாணையை வெளியிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Next Story
