மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு...

திகைத்துப் போன சசிகலா ஆதரவாளர்கள்... ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி...
x

மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு... திகைத்துப் போன சசிகலா ஆதரவாளர்கள்... ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி

ச‌சிகலா ஆதரவாளர்கள் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கட்சியினருக்கு ஓ.பி.எஸ்., இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை தயார் செய்யுமாறு ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் ச‌சிகலா ஆதரவாளர்கள் பங்கேற்காமல் இருப்பதை மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்