திடீர் ராஜினாமா...எழும் சந்தேகம் - தள்ளிப்போகிறதா மக்களவைத் தேர்தல்?

x

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது...

கடந்த 2019ல் மார்ச் மாதம் 10ம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு, ஏப்ரல் 11 முதல் 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது... தேர்தல் முடிவுகளும் மே 23ல் வெளியாகின... நாடாளுமன்ற மக்களவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது... இந்த சூழலில், தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே கடந்த மாதம் 15ம் தேதியுடன் ஓய்வு பெற்றார்... மேலும், 2027 வரை பதவிக்காலம் உள்ள போதிலும், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்தார்... தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது வரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை... இந்நிலையில், தேர்தலும் தள்ளிப்போகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்