"இந்தியா" கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?

x

இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படாத நிலையில் இதுகுறித்து பாஜக புதிய பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது... இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராகுல், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பேனர்ஜி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பெண் ஒருவர் தனக்கு மாப்பிள்ளை பார்க்க செல்வது போலவும் ராகுலை பார்த்து மணப்பெண் மணமகன் நீங்கள் தானே என கேட்க, உடனே அருகில் இருந்த மற்றவர்கள் அனைவரும் நான் தான் மணமகன் என தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது போல வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக மணமகனையே தேர்வு செய்ய முடியாதவர்கள் பிரதமரை எப்படி தேர்வு செய்வார்கள் என்று கேட்பது போல அந்த விளம்பரம் அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்