"பிள்ளையார் சுழி போட்டால் தான்.." - உணர்ச்சி பொங்க பேசிய எடப்பாடி பழனிசாமி பேச்சு

x

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி என்றும், அதில் ஒன்று அதிமுக என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடலூர் தொகுதியில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்தை ஆதரித்து, கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக ஒரு கட்சி முளைத்துள்ளதாகவும், தமிழகம் என்றாலே இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி என்றும் கூறினார். 2026 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்றும், அதற்கு இந்த தேர்தல் அடிப்படையான தேர்தல் என்றும் தெரிவித்தார்....


Next Story

மேலும் செய்திகள்