முன்னாள் முதல்வரை நேரில் சென்று அழைத்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

x

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் வரும் 27ம் தேதி அவரது சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் அழைப்பிதழ் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்