திமுக தேர்தல் அறிக்கை இறுதிக்கட்டத்தில்...?

x

'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' - DMK Manifesto 2024' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு திமுக தலைமையால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் திமுக தேர்தல் அறிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதாகவும், விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்