"தேர்தல் பத்திரம் மூலம் ஒரு பைசா கூட வாங்காத கட்சி கம்யூனிஸ்ட் கட்சி" - சீதாராம் யெச்சூரி பேச்சு

x

தேர்தல் பத்திரம் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாயை பாஜக முறைகேடாக பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை புரசைவாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என்று கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் சோதனையில் அதிக பணத்துடன் சிக்குவது பாஜகவினர்தான் என்றும், தேர்தல் பத்திரம் மூலம் கோடி கணக்கில் பணம் பெற்றது பாஜகதான் என்றும் அவர் கூறினார். தேர்தல் பத்திரம் மூலம் ஒரு நயா பைசா கூட வாங்காத கட்சி கம்யூனிஸ்ட் கட்சி என்றும் அவர் கூறினார்.

விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி கார்ப்ரேட் முதலாளிகளை மிரட்டி, தேர்தல் பத்திரம் மூலம் பாஜக இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக பெற்றுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்