"டெல்லி காற்று மாசு.. பாஜக தான் காரணம்" - அமைச்சர் கோபால் ராய் குற்றச்சாட்டு

x

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட "ஸ்மோக் டவர்" செயல்படாமல் உள்ளதற்கு, பாஜகவே காரணம் என்று, டெல்லி அமைச்சர் கோபால் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மரபுகளையும் மீறி, மாசுக்கட்டுப்பாட்டு குழு தலைவராக அஸ்வனி குமாரை மத்திய அரசு நியமித்ததாக கூறினார். அவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி,உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, புகை மூட்டம் ஆய்வுக்கான கட்டணத்தை நிறுத்தியதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, ஏஜென்சிகள் ஆய்வை நிறுத்தியதுடன், கெனாட் ப்ளேஸ் பகுதியில் அமைக்கப்பட்ட புகை கோபுரமும் மூடப்பட்டதாக கூறினார். இந்த டவர் மூடப்பட்டதற்கு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுதான் காரணம் என்றும் அமைச்சர் கோபால் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்