பாஜக உடன் போட்ட டீலிங்... எத்தனை சீட் கிடைக்கும்? - டெல்லியில் குமாரசாமி போட்ட கணக்கு

x

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அவருடன் கோவா முதலமைச்சர் பிரமோத் ஷாவந்த் உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து Xதளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய குமாரசாமி முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரவேற்பதாகவும் கூறியுள்ளனர். சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பாஜக கூட்டணியில் இணைவது குறித்து விவாதித்த‌தாகவும், கூட்டணிக்காக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்