நாடே உற்று நோக்கும் 2 தொகுதிகள்.. களம் இறங்கபோவது யார்? - நாளையே கடைசி...இன்றும் உடையா சஸ்பென்ஸ்

x

உத்தரபிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலியில் காங்கிரசில் யார் போட்டி என்பது குறித்து சஸ்பென்ஸ் தொடர்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாகும். அமேதி தொகுதியில் 1980 ஆம் ஆண்டு சஞ்சய் காந்தியும், அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் வெற்றிப்பெற்ற தொகுதியாகும். 1998 தேர்தலில் தொகுதியை பாஜக வசமாக்கினாலும் 1999 தொகுதியில் போட்டியிட்டு சோனியா காந்தி வென்றார். அதன்பிறகு அமேதியில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி 2019 தேர்தலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். அப்போது வயநாட்டில் வென்ற ராகுல் காந்தி, இப்போதும் அங்கேயே களம் இறங்கியிருக்கிறார். அமேதியில் அவர் போட்டியிடுவாரா என்ற கேள்வி தொடர, அமேதியில் வேட்பாளரை அறிவிக்காமலே காங்கிரஸ் அமைதி காத்து வந்தது. மறுபுறம் மீண்டும் தொகுதியில் களமிறங்கியிருக்கும் ஸ்மிருதி இரானி போட்டிக்கு தயாரா என சவால் விடுத்து வருகிறார். இதுபோல் காங்கிரஸின் மற்றொரு பாரம்பரிய தொகுதியான ரேபரேலியிலும் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை. கடந்த முறை ரேபரேலியில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை எம்.பி. ஆகிவிட்டார். இப்போது பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என தொண்டர்கள் எதிர்பார்த்த வேளையில் அங்கும் காங்கிரஸ் கூடாரத்தில் அமைதியே நிலவுகிறது. நாளை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்ற சூழலில், காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்காதது தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்