காங். வாரிசை வைத்தே கூர் சீவிய அமித்ஷா... குடும்பத்தையே சாய்த்த `ஒய்-பிளஸ்’ பாசம்

x

#congress | #bjp | #loksabhaelection2024

காங். வாரிசை வைத்தே கூர் சீவிய அமித்ஷா... குடும்பத்தையே சாய்த்த `ஒய்-பிளஸ்’ பாசம் - வேண்டியதை வரமாக கொடுத்த பாஜக

இமாச்சல் பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார்...

பாலிவுட்டில் மட்டுமல்ல... பொதுவாகவே பலரையும் தடாலடியாக விமர்சித்து... அதிரடி காட்டி... சர்ச்சையில் சிக்குபவர் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.

அரசியலிலும் தடாலடியான கருத்துகளை கூறி வந்த கங்கனா ரணாவத்திற்கு, எதிர்வரும் மக்களவை தேர்தலில், இமாச்சல் பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி இருக்கிறது...

அடிப்படையில், கங்கனாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், காங்கிரஸ் பாரம்பரியத்தின் வழி வந்தவர்கள்..

கங்கனாவின் தாத்தா ஹிமாச்சலில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர். இப்படி காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த குடும்பம்... பாஜக பக்கம் சாய காரணமாகியது, கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்.

மும்பையில் கங்கனா ரணாவத்துக்கு சொந்தமான பங்களாவின் ஒரு பகுதியை, விதிமீறல் புகாரில் அன்று காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா தலைமையிலான அரசு இடித்து தள்ளியது.

இதையடுத்து சிவசேனா தலைவர்களுக்கும்... கங்கனா ராணாவத்துக்கும் இடையே வார்த்தை போர் முற்றியது.

தொடர்ந்து பல மிரட்டல்களுக்கு ஆளான கங்கனாவுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கியது, மத்திய உள்துறை அமைச்சகம்.

இது தவிர அன்று இமாச்சலில் ஆட்சியில் இருந்த பாஜக அரசும் கங்கனாவுக்கு தனியாக பாதுகாப்பு வழங்க முடிவு செய்தது.

பாஜக காட்டிய இந்த அக்கறையே கங்கனா குடும்பத்தை அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வைத்தது.

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை... பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக கங்கனா பேசி வந்தார்.

இந்தியாவா? பாரதா ? என்று சர்ச்சை எழுந்த போது.... "நாம் பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல" என கூறினார்.

அதோடு, ஹமாஸ் அமைப்பை ராவணனோடு ஒப்பிட்ட கங்கானா... இஸ்ரேல் தூதரை சந்தித்து போரில் இஸ்ரேலுக்கு ஆதரவும் தெரிவித்தார்.

கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என அண்மையில் கூறி இருந்தார், கங்கனா...

அவர் எதிர்பார்த்த படியே, பாஜக வேட்பாளராக தேர்தலில் களமிறங்கி இருப்பது, கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்