மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
தேர்தல் பிரசாரத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை மதுரை செல்லவுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுரையில் இன்று மாலை நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மதுரை, சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றவுள்ளார். இதற்காக மதுரையில் வண்டியூர் அருகே லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் விமானம் மூலம் மதுரை செல்லும் முதலமைச்சரை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்கவுள்ளனர். பின்னர் 6 30 மணிக்கு துவங்கும் பிரசாரத பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
