மொத்தமாக மாறப்போகும் சென்னை அடையாறு... முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு

x

அடையாறு நதி சீரமைப்பு திட்டத்தின் மூலம், அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. திட்டத்தின்படி, அடையாறு நதியின் இரு கரைகளிலும் கழிவுநீர் குழாய்கள் அமைத்து, கழிவுநீரானது கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டவுள்ளது. இதற்காக 14 கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல், அடையாறு ஆற்றை கிளாஸ் D வகையிலான நீர் நிலையாக தரம் உயர்த்துதல், ஆற்றின் கொள்ளளவை மேம்படுத்துதல், நீரின் தரம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை உறுதி செய்தல், ஆற்றின் கரையில் நான்கு பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளை அமைத்தல் என பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நிலையில், இத்திட்டத்திற்கு தேவையான 4 ஆயிரத்து 778 கோடி ரூபாய்க்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதலை வழங்கி, பணிகளை துவங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்