"இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?" - பிரசாரத்தில் ஸ்மிருதி இரானி கேள்வி
வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, சென்னையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தில் பேசிய ஸ்மிருதி இரானி, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியா கூட்டணிக்கு கொள்கை கிடையாது என்றும், நாட்டை சூறையாடுவது தான் ஒரே நோக்கம் என்றும் ஸ்மிருதி இரானி விமர்சித்தார். திமுக தலைவர்கள் சனாதனம் குறித்து விமர்சனம் செய்த போது நாடே எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், தேசத்தின் வளர்ச்சிக்காக பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்...
Next Story
