"மாநில தலைவர் மாற்றமா..?".. பாஜக வின் புதிய தலைவர் பட்டியல் - முக்கிய நிர்வாகிகளுக்கு பேரதிர்ச்சி

x

பா.ஜ.க.வில் புதிய தேசிய நிர்வாகிகளை நியமித்து, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

புதிய பட்டியலில் 13 துணை தலைவர்கள் மற்றும் 9 தேசிய பொதுச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் மற்றும் திலீப் கோஷ் ஆகியோர் துணைத் தலைவர்களாக இருந்த நிலையில், புதிய பட்டியலில் அவர்களது பெயர் இடம்பெறவில்லை. சரோஜ் பாண்டே தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா பா.ஜ.க தலைவராக இருந்த பண்டி சஞ்சய் குமார், தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொதுச்செயலாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த சி.டி. ரவி, திலில் சாய்கா உள்ளிட்டோர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில பா.ஜ.க தலைவராக சி.டி ரவி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்