நீதிபதிகள் நியமனம் -நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

x

நீதிபதிகள் நியமனம் -நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

நீதிபதிகள் நியமனத்தில் பல்வேறு பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மக்களிடையே நீதித்துறை மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தின்போது, சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்திற்கு பரிந்துரைக்கும் போது போதுமான எண்ணிக்கையில் பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை சமுதாயத்தினர் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.மேலும், சாதாரண மக்களும் எளிதில் நீதியை பெறும் வகையில், நாடு முழுவதும் 4 அல்லது 5 இடங்களில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.விடுமுறையில் பின்பற்றப்படும் நடைமுறையை மாற்றியமைக்கவும், நீதிபதிகள், தங்கள் சொத்துக்கணக்குகளை வெளியிடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.ஓராண்டில் வழக்குகளுக்கான தீர்வு குறித்த ஆண்டறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்