"பிரதமர் தமிழக வருகைக்குப் பிறகு.. பாஜக வரலாற்று வெற்றி பெறும்.." - உறுதியாக சொன்ன மத்திய அமைச்சர்

x

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் சௌகார்பேட்டை மற்றும் மின்ட் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை ஆதரித்து, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வாக்கு சேகரித்தார். இடையே செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாகூர், பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவு அதிகரித்திருப்பதாக கூறினார். பிரதமர் மோடி தமிழக வருகைக்குப் பிறகு, பாஜக வரலாற்று வெற்றி பெறும் என்று உறுதியுடன் கூறுவதாக அனுராக் தாகூர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்