அண்ணாமலை யாத்திரை.. ட்விஸ்ட் வைத்த ஈபிஎஸ் - திடீர் அறிவிப்பு

x

தமிழகம் முழுதும் நான்கு கட்டங்களாக பாஜக தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் - என் மண் என் மக்கள் - என்ற பாதயாத்திரை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதனை ஒட்டி, வாஜ்பாய் திடலில் பிரமாண்டமாக மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். அமித்ஷா வருகையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் சுமார் 2000 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அண்ணாமலை பாதயாத்திரை செல்வதற்காக பிரத்தியேகமான வாகனங்களும் தயார் செய்யப்பட்டு ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளன. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி, மண்டபம் கேம்பில், வாகன அணிவகுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்