ஆட்டோ ஓட்டி அசர வைத்த ஆந்திர அமைச்சர் ரோஜா..!

ஆந்திர மாநிலத்தில் வாகனமித்ரா என்ற திட்டத்தின் கீழ் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு ஆந்திர மாநில அரசு நிதி உதவி வழங்கி வருகிறது...
x

ஆட்டோ ஓட்டி அசர வைத்த ஆந்திர அமைச்சர் ரோஜா..!

ஆட்டோ டிரைவர் அவதாரம் எடுத்த ஆந்திரா அமைச்சர் ரோஜா

ஆந்திர மாநிலத்தில் வாகனமித்ரா என்ற திட்டத்தின் கீழ் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு ஆந்திர மாநில அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. வாகன மித்ரா திட்டத்தின் மூன்றாவது கட்ட நிதி உதவி வழங்க நிகழ்ச்சியில் விஜயவாடாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதி உதவி வழங்கி அவர்களுடன் ஆட்டோவில் பயணித்தார்.

ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா திருப்பதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து காக்கி சட்டை அணிந்து முதல்வரை ஒரு படி மிஞ்சி ஆட்டோ ஓட்டுனராக அவதாரம் எடுத்த அவர் பயணிகள் ஆட்டோவை சற்று தூரம் ஓட்டி சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்