அரசியல் களத்தை உலுக்கிய அன்புமணி ராமதாஸ் டுவிட் - "தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்"

x

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? என்று கேள்வி எழுப்பிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 80% வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்குவதற்கான சட்டத்தை வரும் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வட இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்வதால் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், உள்ளூர் மக்கள் அதிக ஊதியமும், அதிக விடுமுறையும் கேட்பதுடன் குறைந்த அளவில் மட்டுமே வேலை செய்வதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு மாவட்ட ஆட்சியராக மாவட்ட மக்களின் நலனுக்கும், வாழ்வாதாரத்திற்கும் வகை செய்ய வேண்டிய அவர், தனியார் அதிகாரியைப் போன்று பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என, கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்