என் மண், என் மக்கள் பாதயாத்திரை... எதிர்பாராமல் வந்த அன்பு பரிசு .. அதிர்ச்சியில் திகைத்த அண்ணாமலை

x

நெல்லை மாவட்டம் அம்பை அருகே என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, தொண்டர் ஒருவர் அசாம் மாநில ஆட்டை பரிசளித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் என்ற பாதயாத்திரை, கடந்த மாதம் ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கியது. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சியில் அவர் யாத்திரை செல்லும் வழியில், தொண்டர்கள் அப்பளத்தினாலான மாலை அணிவித்தனர். மேலும், அசாம் மாநில ஆடு ஒன்றும் பரிசளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த அப்பள நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்..


Next Story

மேலும் செய்திகள்