தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது பாதயாத்திரையின் போது பொதுமக்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் அண்ணாமலை தனது பாதயாத்திரையை ஜூலை 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே பாத யாத்திரையை தொடர்ந்தார். அப்போது, பொதுமக்களின் செல்போனை வாங்கி அவர் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
Next Story