அதிமுக பொதுக்குழு தீர்மானம்..அடுத்தடுத்து மேல்முறையீடு..
கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு தடை விதிக்கக்க கோரி ஒ.பி.எஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 28ஆம் தேதி நிராகரித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், தீர்மானங்களுக்கு தடை விதித்தால், பிரதான வழக்கில் நிவாரணம் வழங்கியதாகி விடும் எனக் கூறி, கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் அக்டோபர் 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் அணியில் உள்ள பி, மனோஜ் பாண்டியன், ஆர். வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகர் ஆகியோர் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஓபிஎஸ் தாக்கல் செய்திருந்த மனுவை அடுத்த வாரம் மீண்டும் பட்டியலிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால், இந்த மேல்முறையீடு மனுக்களும், ஒன்றாக இணைத்து விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
