"தந்தையை கொன்றவர்களை பார்க்கும் போது வலி ஏற்பட்டது" - ராகுல் காந்தி

தந்தையின் மரணம் தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கற்று கொடுத்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
x
"தந்தையை கொன்றவர்களை பார்க்கும் போது வலி ஏற்பட்டது" - ராகுல் காந்தி

தந்தையின் மரணம் தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கற்று கொடுத்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் ஸ்ருதி கபிலாவுடன், ராகுல் காந்தி உரையாடினார். ராஜிவ்காந்தியின் நினைவு நாள் குறித்து பேசிய அவர், தந்தையின் மரணம் மிகப்பெரிய அனுபவத்தை கற்று கொடுத்ததாக பதிலளித்தார். ஒரு மகனாக தந்தையை இழந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், தந்தையை கொன்றவர்களை காணும்போது மிகுந்த வலியை ஏற்படுத்தியதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். ஆனால், தந்தையின் மரணம் தனக்கு பலவற்றை கற்றுக் கொள்ளச் செய்ததாகவும் கூறியுள்ளார். பிரதமர் மோடியே தன்னை தாக்கினாலும், அவரிடம் இருந்து ஏதாவது கற்று கொள்வேன் என கூறியுள்ளார். வாழ்க்கையில் பெரிய ஆற்றல் அளிக்கும் இடத்தில் இருந்தால் எப்போதும் காயப்பட நேரிடும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்