"ஓராண்டு சாதனையைப் பார்க்க நினைத்தபோது மின்வெட்டு" சீமான் ட்வீட் ,செந்தில் பாலாஜி பதிலடி
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் டுவிட்டரில் காரசார விவாதத்தில் ஈடுபட்டு இருப்பது, அரசியல் தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
"ஓராண்டு சாதனையைப் பார்க்க நினைத்தபோது மின்வெட்டு" சீமான் ட்வீட் ,செந்தில் பாலாஜி பதிலடி
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் டுவிட்டரில் காரசார விவாதத்தில் ஈடுபட்டு இருப்பது, அரசியல் தளத்தில் பேசுபொருளாகி உள்ளது. திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை தொலைக்காட்சியில் பார்க்க நினைத்தபோது, மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இதுதான் திராவிட மாடல் என்றும் சீமான் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சமீபத்தில் கடற்கரையோர சொகுசு பங்களாவில் சீமான் குடியேறியதாகவும், அதன் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால், 'உண்மையிலேயே' மின்வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்வதாகவும் கூறினார். தொடர்ந்து மீண்டும் ட்வீட் செய்த சீமான், தங்கள் குடிசையில், தானும் தங்க அனுமதிக்க வேண்டும் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டுப் பதிவிட்டார். பின்னர், இதற்கும் பதிலளித்து ட்வீட் செய்த செந்தில் பாலாஜி, குடிசையானாலும், மாளிகையானாலும் அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும், சீமான் விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்கிக்கொள்ளலாம் என்றும் பதிவிட்டு உள்ளார்.
Next Story