"தமிழக மீனவர்களிடம் ரூ.1 கோடி கேட்பது அநீதி" - ஓ.பன்னீர்செல்வம்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், சொந்த ஊர் செல்ல விரும்பினால், ஒருகோடி ரூபாய் பிணைத் தொகை செலுத்தி செல்லலாம் என அந்நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து ஓ.பி.எஸ். விடுத்துள்ள அறிக்கையில், அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றங்கள் இயங்குவதாகவும், ஒரு கோடி ரூபாய் கேட்கும் இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது என்றும் சாடியுள்ளார். ஒருகோடி ரூபாய் செலுத்தும் சக்தி இருந்தால், மீன்பிடி தொழிலுக்கே மீனவர்கள் செல்லமாட்டார்கள் என கூறியுள்ள ஓ.பி.எஸ், இலங்கையில் உள்ள நிதி நெருக்கடியை போக்க, இதுபோன்ற நிதி திரட்டல் கூடாது என சாடியுள்ள ஓ.பி.எஸ், நட்பு நாடான இந்திய மீனவர்களை, பிடித்து சித்ரவதை செய்வது நன்றி மறத்தலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Next Story