"உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும்" - அமைச்சர் சிவசங்கர்

சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மேற்கு கூவம் சாலை வழியாக, புதிய பேருந்து வழித்தட திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
x
சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மேற்கு கூவம் சாலை வழியாக, புதிய பேருந்து வழித்தட திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இந்த திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து பேசிய அமைச்சர் சிவசங்கர், பேருந்து வசதிகள் இல்லாத இடங்களில், சிற்றுந்துகள் இயக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கைக்கு, முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்