திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி பிரசாரம்

பழனியில் திமுகவுக்கு நடிகர் இமான் அண்ணாச்சி பிரசாரம் - குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள்
x

பழனியில் நடிகர் இமான் அண்ணாச்சி திமுக வேட்பாளரை ஆதரித்து வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழனி நகராட்சியின் 29-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி வாக்கு சேகரித்தார். வீடுவீடாக சென்ற இமான் அண்ணாச்சி, வாக்காளர்களிடம் துண்டுபிரசுரம்  வழங்கி வாக்கு கேட்டார். அதுவரை இமான் அண்ணாச்சியை திரையில் பார்த்த பெண்கள், திடீரென வீட்டுவாசலில் பார்த்தவுடன், செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்