25 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கும் வேட்பாளர் - அமைச்சர் சக்கரபாணி தீவிர பிரசாரம்
25 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கும் வேட்பாளர் - அமைச்சர் சக்கரபாணி தீவிர பிரசாரம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.16 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதனையடுத்து, வேட்பாளர்களை ஆதரித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நத்தத்தில் அரசு கலைக் கல்லூரி, மின் மயானம், குப்பை சுத்திகரிப்பு கிடங்கு போன்றவற்றை அமைக்க வேட்பாளர் பாட்ஷா 25 ஏக்கர் இலவசமாக நிலம் தருவார் என்றார். மேலும், கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்த 5 பவுன் நகைகளுக்காக கடன் ரத்து செய்யப்பட்டு, 25-ம் தேதி உரியவர்களின் கைகளில் கிடைக்கும் என அறிவித்தார்.
Next Story