"தேவை ஏற்பட்டால் கஜானாவை கூட காலியாக்குவோம்" - பிரதமர் மோடி அதிரடி

"தேவை ஏற்பட்டால் கஜானாவை கூட காலியாக்குவோம்" - பிரதமர் மோடி அதிரடி
x
ஏழைகள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக, மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஏழைகளின் நலனுக்காக உத்திரபிரதேச பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றார். கொரோனா கால கட்டத்தில் ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்கிற நிலை ஒரு போதும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஒருவர் கூட பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்பதில் அதிக விழிப்புடன் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார். ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்திற்காக அரசு இதுவரை 2 லட்சத்து 60 கோடி ரூபாய் வரை, செலவு செய்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசிகளின் விலை பன்மடங்கு அதிகம் என்றும், ஆனாலும் பாஜக அரசை பொறுத்தவரை, நாட்டு மக்களின் உயிரே பிரதானம் என கூறியுள்ளார். தேவை ஏற்பட்டால் கஜானாவை கூட காலியாக்குவோம் என்றும், மக்களின் உயிருடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் உரையாற்றினார்.

Next Story

மேலும் செய்திகள்