"பாஜகவினர் தலித்துகளிடையே ஊடுருவ முயற்சிக்கின்றனர்" - விசிக தலைவர் திருமாவளவன்
பாஜகவில் தலித்துகள் இணைவது மிகப்பெரிய ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் தலித்துகள் இணைவது மிகப்பெரிய ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் விசிக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தலித்துகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் விநாயகர் சிலைகளை அளித்து தலித்துகளிடையே பாஜக ஊடுருவ பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சனாதனத்தை முறியடிக்கவே திமுக கூட்டணியில் உள்ளோம் என்று கூறிய அவர் இந்தியர்களை மதரீதியாகவும், இந்துக்களை சாதி ரீதியாக பிரித்தால் தான் வாக்குகளை பெற முடியும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் திட்டம் என்றும் கூறி உள்ளார். மேலும், இத்தகைய பாஜகவில் தலித்துகள் இணைவது மிகப்பெரிய ஆபத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story