"அரியலூர் மாணவி விவகாரம்" - முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது | CM Stalin |
அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டின் அருகில் A.B.V.P அமைப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு ஆஜர்படுத்தினர். அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, கைதான 32 பேரில் 28 ஆண்கள் செங்கல்பட்டு சிறையிலும், 4 பெண்கள் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Next Story