55 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல்
உத்தரபிரதேசத்தில் உள்ள 55 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள 55 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 10ம் தேதி 58 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை 55 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
சாஹரன்பூர், அம்ரோஹா, ராம்பூர், பரைலி, பதாவுன், ஷாஜகான்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
நாளை நடைபெறும் தேர்தலில் 9 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டதுடன், 586 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொத்தமாக 2 கோடியே, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 441 வாக்காளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான முகமது அஸம்கான், மாநில நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா, பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சரான தரம்சிங் சைனி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேஷ்சந்திர குப்தா, உயர்கல்வித் துறை இணை அமைச்சர் குலாப் தேவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதால், சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது.
Next Story