"பாஜக முதுகில் குத்தியதால் கோவாவில் போட்டி" - ஆதித்ய தாக்கரே

கோவாவில் அனைத்து தேர்தலிலும் சிவசேனா கட்சி போட்டியிடும் என ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாஜக முதுகில் குத்தியதால் கோவாவில் போட்டி - ஆதித்ய தாக்கரே
x
கோவா மாநிலம் பனாஜியில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா அமைச்சர் ஆதித்ய தாக்கரே, பாஜகவுடன் இருந்த நட்பின் காரணமாக கடந்த தேர்தல்களில் சிவசேனா கவனம் செலுத்தவில்லை என தெரிவித்தார். பாஜக தங்களை முதுகில் குத்தியதால் கோவாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா போட்டியிடும் என கூறியுள்ளார். கோவா மாநிலத்திற்கு சிவசேனா கட்சி தேவைப்படுகிறது எனவும், பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தாலும் கோவாவில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றும் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்