திருச்சி ESI மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - காங்கிரஸ் எம்பி கோரிக்கை
திருச்சியில் உள்ள ESI மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசிற்கு காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் உள்ள ESI மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசிற்கு காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய திருச்சி எம்பி திருநாவுக்கரசர், திருச்சி பெரிய மிளகுபாறையில் இயங்கி வரக்கூடிய ESI மருத்துவமனையை, அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் இல்லை என்று தெரிவித்தார். மேலும், இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்துவதோடு, இங்குள்ள கிளை அலுவலகத்தை துணை மண்டல அலுவலகமாகவும் தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Next Story