"சோனியா காந்தி வீடு, காங். அலுவலகத்துக்கு வாடகை பாக்கி" - ஆர்.டி.ஐ. மூலம் வெளியான தகவல்

டில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
x
இது தொடர்பாக சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 

அதில், அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு 12 லட்சத்து, 69ஆயிரத்து 902 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது தெரியவந்துள்ளது. 

அதேபோல், ஜன்பத் சாலையில் சோனியா வசிக்கும் வீட்டிற்கு 4 ஆயிரத்து 610 ரூபாய் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. சோனியாவின் தனிச்செயலர் வீணா ஜார்ஜ்ம் அரசிற்கு 5 லட்சத்து, 07ஆயிரத்து, 911ரூபாய் பாக்கி வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்