"பொய்யான வாக்குறுதி : மக்களை ஏமாற்றியது திமுக" - ஓபிஎஸ் குற்றச்சாட்டு
அதிமுகவின் சாதனையும், திமுகவின் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்
அதிமுகவின் சாதனையும், திமுகவின் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, ஒ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர்,அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியதாக கூறினார். ஆனால் திமுக ஆட்சியில் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்தார். தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கியதாகவும் குற்றம்சாட்டினார். சட்டமன்ற தேர்தலில் இழந்ததை நகர்ப்புற உள்ளாட்சி மீட்டெடுக்க வேண்டும் என அதிமுகவினரை கேட்டுக்கொண்டார்.
Next Story