வானொலி நிலையங்கள் - கேள்வியும், பதிலும்
மாநிலங்களில் உள்ள பிராந்திய அகில இந்திய வானொலி நிலையங்களை மூடவில்லை என, மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் உள்ள பிராந்திய அகில இந்திய வானொலி நிலையங்களை மூடவில்லை என, மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி.தயாநிதி மாறன் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிராந்திய அகில இந்திய வானொலி நிலையங்கள் மத்திய அரசு மூட திட்டமிட்டுள்ளதாகவும் அதன் மூலம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய போகிறதா என கேள்வியெழுப்பினார். மேலும், டிஜிட்டல் எஃப்.எம் கொண்டு வரும் திட்டம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், அகில இந்திய வானொலியின் எந்த நிலையத்தையும் மூடவில்லை எனவும் தரம் உயர்த்தும் பணியை மட்டுமே செய்து வருவதாக குறிப்பிட்டார். எந்த பிராந்திய மொழி சேனலையும் புறக்கணிக்கவில்லை என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள பொதிகை சேனல் இந்தியாவில் உள்ள மற்ற பிராந்திய தூர்தர்ஷன் சேனல்களை காட்டிலும் முதல்முறையாக ஹெச்டி தரத்தில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். டிஜிட்டல் எப்எம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இது நல்ல யோசனை என்றும் உறுப்பினர் மாறன் தனது அலுவலகத்தில் வந்து தம்மை சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார்.
Next Story