பஞ்சாபின் பாரம்பரியத்தையும் மரபையும் "பாஜக உண்மையான நோக்கத்துடன் எடுத்து செல்லும்" - பிரதமர் நரேந்திர மோடி

பஞ்சாபின் பாரம்பரியத்தையும் மரபையும் உண்மையான நோக்கத்துடன் பாஜகவால் தான் எடுத்து செல்ல முடியும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் பாரம்பரியத்தையும் மரபையும் பாஜக உண்மையான நோக்கத்துடன் எடுத்து செல்லும் - பிரதமர் நரேந்திர மோடி
x
பஞ்சாபின் பாரம்பரியத்தையும் மரபையும் உண்மையான நோக்கத்துடன் பாஜகவால் தான் எடுத்து செல்ல முடியும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  பிரதமர் மோடி, காணொலி மூலம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் சீக்கியர்களை படுகொலை செய்ததாகவும், ஆனால் இனப் படுகொலையின் குற்றவாளிகளை பாஜக தண்டித்ததாக குறிப்பிட்டார். காங்கிரஸால் கர்தார்பூரைக் கூட இந்தியாவில் வைத்திருக்க முடியவில்லை என்றும், ஆனால் பாஜக புனித ஆலயத்திற்கான பாதையைத் திறந்துவிட்டதாக கூறினார். பாஜக சீக்கிய சமூகத்துக்கு ஆதரவாக உள்ளது என்றும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டும் பஞ்சாபின் பாரம்பரியத்தையும் மரபையும் உண்மையான நோக்கத்துடன் முன்னெடுத்து செல்ல முடியும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். எல்லைப் பகுதிகளை மேம்படுத்த மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, பஞ்சாப்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்