சோனியா காந்தியை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தியை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
x
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டுள்ளார். 

டெல்லியில், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். உடனடியாக சோனியா காந்தி, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை  நியமித்து அதற்கான பதில் கடிதத்தை வழங்கினார். இச்சந்திப்பின்போது, ராகுல் காந்தி உடனிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்