பஞ்சாப்பில் காங். முதல்வர் வேட்பாளர் யார்? - சன்னி? சித்து ?
பரபரப்பு நிறைந்த பஞ்சாப் தேர்தல் களத்தில், சட்டமன்ற தேர்தலை யொட்டி, காங்கிரஸ் கட்சி இன்று தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவுள்ளது.
பரபரப்பு நிறைந்த பஞ்சாப் தேர்தல் களத்தில், சட்டமன்ற தேர்தலை யொட்டி, காங்கிரஸ் கட்சி இன்று தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவுள்ளது.
வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதி பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிரச்சாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவுள்ளார். முன்னதாக காங்கிரஸ் வேட்பாளராக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அல்லது அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவோஜித் சிங் சித்து ஆகிய இருவரில் ஒருவர் அறிவிக்கப்பட இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வராக சன்னி அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சன்னியின் மருமகன் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முதல்வர் வேட்பாளராக நேர்மையான ஒருவர் அறிவிக்கப்பட வேண்டும் என சித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், அவர் ராகுல் காந்தியின் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு தாம் கட்டுப்படுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
Next Story