"ராஜா போல் செயல்படுகிறார் பிரதமர் மோடி" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
"ராஜா" வாக உள்ள ஒருவர் கூலி தொழிலாளியிடம் பேசவோ, அவருடைய பேச்சை கேட்கவோ மாட்டார் என்றும் அது போலவே பிரதமர் மோடியின் செயல்பாடுகள் உள்ளதாகவும் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
"ராஜா" வாக உள்ள ஒருவர் கூலி தொழிலாளியிடம் பேசவோ, அவருடைய பேச்சை கேட்கவோ மாட்டார் என்றும் அது போலவே பிரதமர் மோடியின் செயல்பாடுகள் உள்ளதாகவும் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். உத்தம்சிங் நகர் கிச்சா மண்டியில் விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, பிரதமரால் வழி நடத்தப்பட்ட இந்தியா தற்போது ராஜாவால் வழி நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். போராடிய விவசாயிகளின் பேச்சை ஒராண்டாக கேட்காத மோடி, ராஜாவை போல செயல்படுகிறார் எனவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். "ராஜா" வாக உள்ள ஒருவர் கூலி தொழிலாளியிடம் பேசவோ, அவர் பேச்சை கேட்கவோ மாட்டார் என்றும் அது போலவே பிரதமர் மோடியின் செயல்பாடுகள் உள்ளதாகவும் ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.
Next Story