அதிமுகவில் சேர்ந்த ஒரே நாளில் கவுன்சிலர் சீட்
நேற்று வரை அமமுகவில் இருந்த நபர், ஒரே நாளில் அதிமுகவில் இணைந்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ள சம்பவம் குன்னூரில் நிகழ்ந்துள்ளது.
நேற்று வரை அமமுகவில் இருந்த நபர், ஒரே நாளில் அதிமுகவில் இணைந்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ள சம்பவம் குன்னூரில் நிகழ்ந்துள்ளது. குன்னூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நகர செயலாளராக இருந்தவர் சையது முபாரக். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். இவர் இருந்த 20 வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சையது முபாரக்கின் மனைவிக்கு அதிமுக சார்பில் கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
Next Story