"ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு ?" - ஆர்.எஸ் பாரதி காட்டம்

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்.பி ஆர் எஸ் பாரதி உரையாற்றினார்.
x
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்.பி ஆர் எஸ் பாரதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு மிக மோசமாக கையாண்டதாக குற்றம் சாட்டிய அவர் கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு அதனைக் இரண்டாவது அலையின் போது அமல் படுத்தி இருக்க வேண்டும் எனவும் ஆனால் அதனை இந்த அரசு செய்ததா? என கேள்வி எழுப்பினார். 

திடீரென ஒரு நாள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்களில் செருப்பு கூட இன்றி பல கிலோ மீட்டர் தூரம் உணவும் குடிநீரும் இன்றி நடந்து சென்றதால் உயிரிழந்தனர் என்றும் இதற்கெல்லாம் யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார்.  

 குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் அதன் மீது அமர்ந்து இருப்பதாக குற்றம் சாட்டினார். அண்ணா கூறியது போல ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்ற கூற்று, இனி வரும் நாட்களில் உண்மையாகும் என கருதுவதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்