நாம் தமிழர் கட்சிக்கு 'விவசாயி' சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்குப் பொதுச் சின்னமாக விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
x
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்குப் பொதுச் சின்னமாக விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக விவசாயி சின்னத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக, அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்